தமிழர் சமயம்

இரண்டு மதங்களை அரவணைக்கும் உலகின் ஒரே இடம்

நாம் பார்க்கவிருக்கும் தலைப்பு – 2 முரண்பட்ட வெவ்வேறு மதங்களையும் ஒன்றிணைத்து இரண்டையும் அரவணைக்கும், உலகின் ஒரே இடம் சாந்தோம் பேராலயம் மட்டுமே!

அந்தப் பேராலயம் அமைந்திருக்கும் இடத்தின் வரலாற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். இரண்டு மதங்கள் இருப்பது பல இடங்களில் உண்டு. ஸ்பெயினின் இஸ்லாமியர்கள் கட்டிய மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. எருசலேம் தேவாயலம் இருந்த இடத்தில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டியிருக்கிறார்கள். அம்மசூதியின் ஒரு சுவர், எருசலேம் ஆலயத்தின் சுவர் (Wailing wall) என்று அழைக்கப்படுவதையும், அங்கு, மக்கள் கண்ணீர் விடுவதையும் பார்க்க முடிகிறது.

இவற்றைப் போல உள்ள இடமாகச் சாந்தோம் பேராலயம் அமைந்திருக்கும் இடத்தைச் சொல்ல முடியாது. முன்னர் சொன்னவை அனைத்தும் முரண்களைச் சொல்கிற இடங்கள். சாந்தோம் பேராலய இடம், இரண்டு மதங்களும் இணைந்திருப்பதைச் சொல்லும் இடம். அந்த இரண்டு மதங்கள்,

  1. புனித தோமாவழித் தமிழர் சமயமாகிய இந்து மதம்
  2. கிறிஸ்தவ மதம்
    கிறிஸ்து என்பது ரோம் ஆட்சியில் இருந்து யூத மக்களை விடுவிக்கப் போராடிய அரசியல் போராளியைக் குறிக்கும். அது இறைவனைக் குறிப்பது அன்று! கிறிஸ்தவர்களின் அகில உலகத் தலைவர் போப்பாண்டவர், படைப்புக் கொள்கையை ஆதரிக்காமல் இருப்பதும் அரசியல் சார்ந்து இருப்பதும் நீங்கள் அறிந்தது தான்.

16ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கீசிய கத்தோலிக்கப் படையினர் கைப்பற்றிய பிறகு 1896இல் இப்போது இருக்கும் தேவாலயம் கட்டப்பட்டது. பின் 2004இல் அது புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்து மத வழிபாட்டிற்குரிய சிலை, (நடராஜப் பெருமான் சிலை) கோவிலில் இருந்தது. இப்போது அந்தச் சிலை அங்கு இல்லை. 2004இல் புதுப்பிக்கப்பட்ட போது அங்கு கிடைத்த இந்து மதக் கட்டடங்கள், அடையாளங்கள் ஆகியவற்றின் பெரும்பகுதியைக் கடலில் தூக்கிப் போட்டார்கள் என்பது தான் வரலாறு.

இப்போது அந்த இடத்தில் தொழும் மக்கள், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்களாக இருப்பதால், அவர்களுக்கு அடிப்படை உண்மைகள் தெரியாது. அந்த உண்மைகள் விளக்கப்படவேண்டும்.

கடவுள் வேறு! மதம் வேறு! மதப்பற்று, இன்னொரு மதத்தை வெறுக்கும். ஆனால், கடவுளை அனுபவிக்கும் அனுபவம், எந்த மதத்தையும் வெறுக்காது. கடவுள், எல்லா மதத்திற்கும் பொதுவானவர். அவர் இப்பேரண்டத்தை ஆள்பவர். கடவுள் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவு வழியில் விளக்கியிருப்பது தான் புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதம். அந்த உண்மையைப் புரிந்து கொண்டால், இந்து மதத்தினர்க்குக் கிறிஸ்தவ மதத்தின் மீது வெறுப்பு வராது. அதே போல, கிறிஸ்தவ மதத்தினர்க்கும் இந்து மதத்தினர்க்கும் வெறுப்பு தோன்றாது.

தோமாவழித் தமிழர் சமயத்தின் முதல் கோவில் கபாலீஸ்வர் கோவில். மதங்களைக் கடந்து கடவுளை உணராத நிலைக்கு மனித இனம் போவது நல்லது இல்லை. டைனோசர் இனம் எப்படி அழிந்ததோ, அப்படி மனித இனமும் மதங்களில் மயங்கி, மதவெறி கொண்டு ஒருவரை ஒருவர் மாய்த்து அழிந்து விடும் நிலை வந்து விடும். இந்த நிலை வராமல் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

(19.07.2020 அன்று இயங்கலை வழி முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரை)

Standard

Leave a comment