தமிழர் சமயம்

இரண்டு மதங்களை அரவணைக்கும் உலகின் ஒரே இடம்

நாம் பார்க்கவிருக்கும் தலைப்பு – 2 முரண்பட்ட வெவ்வேறு மதங்களையும் ஒன்றிணைத்து இரண்டையும் அரவணைக்கும், உலகின் ஒரே இடம் சாந்தோம் பேராலயம் மட்டுமே!

அந்தப் பேராலயம் அமைந்திருக்கும் இடத்தின் வரலாற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். இரண்டு மதங்கள் இருப்பது பல இடங்களில் உண்டு. ஸ்பெயினின் இஸ்லாமியர்கள் கட்டிய மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களாக மாற்றப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. எருசலேம் தேவாயலம் இருந்த இடத்தில் இஸ்லாமியர்கள் மசூதி கட்டியிருக்கிறார்கள். அம்மசூதியின் ஒரு சுவர், எருசலேம் ஆலயத்தின் சுவர் (Wailing wall) என்று அழைக்கப்படுவதையும், அங்கு, மக்கள் கண்ணீர் விடுவதையும் பார்க்க முடிகிறது.

இவற்றைப் போல உள்ள இடமாகச் சாந்தோம் பேராலயம் அமைந்திருக்கும் இடத்தைச் சொல்ல முடியாது. முன்னர் சொன்னவை அனைத்தும் முரண்களைச் சொல்கிற இடங்கள். சாந்தோம் பேராலய இடம், இரண்டு மதங்களும் இணைந்திருப்பதைச் சொல்லும் இடம். அந்த இரண்டு மதங்கள்,

  1. புனித தோமாவழித் தமிழர் சமயமாகிய இந்து மதம்
  2. கிறிஸ்தவ மதம்
    கிறிஸ்து என்பது ரோம் ஆட்சியில் இருந்து யூத மக்களை விடுவிக்கப் போராடிய அரசியல் போராளியைக் குறிக்கும். அது இறைவனைக் குறிப்பது அன்று! கிறிஸ்தவர்களின் அகில உலகத் தலைவர் போப்பாண்டவர், படைப்புக் கொள்கையை ஆதரிக்காமல் இருப்பதும் அரசியல் சார்ந்து இருப்பதும் நீங்கள் அறிந்தது தான்.

16ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கீசிய கத்தோலிக்கப் படையினர் கைப்பற்றிய பிறகு 1896இல் இப்போது இருக்கும் தேவாலயம் கட்டப்பட்டது. பின் 2004இல் அது புதுப்பிக்கப்பட்டது. அப்போது இந்து மத வழிபாட்டிற்குரிய சிலை, (நடராஜப் பெருமான் சிலை) கோவிலில் இருந்தது. இப்போது அந்தச் சிலை அங்கு இல்லை. 2004இல் புதுப்பிக்கப்பட்ட போது அங்கு கிடைத்த இந்து மதக் கட்டடங்கள், அடையாளங்கள் ஆகியவற்றின் பெரும்பகுதியைக் கடலில் தூக்கிப் போட்டார்கள் என்பது தான் வரலாறு.

இப்போது அந்த இடத்தில் தொழும் மக்கள், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்களாக இருப்பதால், அவர்களுக்கு அடிப்படை உண்மைகள் தெரியாது. அந்த உண்மைகள் விளக்கப்படவேண்டும்.

கடவுள் வேறு! மதம் வேறு! மதப்பற்று, இன்னொரு மதத்தை வெறுக்கும். ஆனால், கடவுளை அனுபவிக்கும் அனுபவம், எந்த மதத்தையும் வெறுக்காது. கடவுள், எல்லா மதத்திற்கும் பொதுவானவர். அவர் இப்பேரண்டத்தை ஆள்பவர். கடவுள் இருக்கிறார் என்பதைப் பகுத்தறிவு வழியில் விளக்கியிருப்பது தான் புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதம். அந்த உண்மையைப் புரிந்து கொண்டால், இந்து மதத்தினர்க்குக் கிறிஸ்தவ மதத்தின் மீது வெறுப்பு வராது. அதே போல, கிறிஸ்தவ மதத்தினர்க்கும் இந்து மதத்தினர்க்கும் வெறுப்பு தோன்றாது.

தோமாவழித் தமிழர் சமயத்தின் முதல் கோவில் கபாலீஸ்வர் கோவில். மதங்களைக் கடந்து கடவுளை உணராத நிலைக்கு மனித இனம் போவது நல்லது இல்லை. டைனோசர் இனம் எப்படி அழிந்ததோ, அப்படி மனித இனமும் மதங்களில் மயங்கி, மதவெறி கொண்டு ஒருவரை ஒருவர் மாய்த்து அழிந்து விடும் நிலை வந்து விடும். இந்த நிலை வராமல் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

(19.07.2020 அன்று இயங்கலை வழி முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரை)

Standard
தமிழர் சமயம்

கபால மலையில் பலியான கபாலீஸ்வரரே போற்றி

“தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் முழக்கம் மாணிக்கவாசகரால் நமக்குக் கொடுக்கப்பட்டது. வரலாற்று வழியில் எவ்வாறு தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதத்தில் இயேசு பெருமான் எவ்வாறு வணங்கப்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

தோமாவழித் தமிழர் சமயமாகிய இந்து மதத்தின் முதல் கோவில் கபாலீஸ்வரர் கோவில். “கபால மலையில் பலியான கபாலீஸ்வரரே போற்றி” என்று நம்முடைய முழக்கத்தை இன்று முதல் அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். கபாலீஸ்வரர் என்பதே இந்து மதத்தின் அடிப்படை நாதமாக இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். கபாலீஸ்வரரே போற்றி என்று வணங்கும் மக்களை நாம் அதிகம் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் கபாலம் என்பதைச் சிவபெருமான் ஏந்தியிருக்கிறார். அதை வைத்துத் தான் அவர் பிச்சை எடுக்கிறார். அந்த மண்டையோடு பிரம்மனுடையது. பிரம்மனுக்கு ஐந்து தலை இருந்தது. சிவ பெருமானுக்கும் ஐந்து தலை இருந்தது. அப்போது பார்வதிக்குக் குழப்பம் ஏற்படுத்த பிரம்மன் முயன்றதால், சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி எடுத்து விட்டார்.

சிவபெருமானை வணங்குபவர்கள் சைவர்கள். விஷ்ணுவிற்குச் சிறப்பு கொடுப்பவர்கள் வைணவர்கள். பிரம்மனுக்குச் சிறப்பு கொடுப்பவர்கள் பிராமணர்கள். பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கு இடையே யார் பெரியவர்கள் என்னும் போட்டி வந்தது. இருவரும் சிவபெருமானைப் போய்ப் பார்த்தார்கள். சிவபெருமான் – ஒருவர் என்னுடைய பாதத்தையும் இன்னொருவர் என்னுடைய முடியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி விடுகிறார். இது தான் திருவண்ணாமலை தீபம் நமக்குச் சொல்லும் புராணக் கதை. விஷ்ணு பன்றி உருவம் எடுத்து பூமியைத் துளைத்தார். பிரம்மன் முடியை நோக்கிப் பறந்து போனார். ஆனாலும் முடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது முடியில் இருந்து ஒரு தாழம்பூ பறந்து வந்தது.

பிரம்மன் பிறகு சிவபெருமானிடம் வந்து நான் முடியைப் பார்த்தேன், இந்தத் தாழம்பூ தான் சான்று என்று சொன்னார். இந்தப் பொய்யைக் கேட்ட சிவபெருமான் – பிரம்மனையும் தாழம்பூவையும் சபித்தார். ஆகையால் தான் பிரம்மனுக்கு என்று கோவில்கள் இல்லை என்று புராணக் கதைகள் இருக்கின்றன.

பிரம்மன், சிவபெருமானைப் போல நடித்து, பார்வதியிடம் நடித்தார் என்னும் புராணக்கதையும் அதனால் பிரம்மனுடைய தலையைச் சிவன் கொய்தார் என்றும் அதனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது என்று பிராமணர்கள் கதை புனைந்திருக்கிறார்கள். அந்தக் கதையைத் தான் இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதே கதையை நம்பிச் சிவபெருமான் பிச்சை எடுப்பது போலக் கோவிலில் கோபுரத்திலும் வைத்திருக்கிறார்கள்.

இனி நாம் இந்தக் கதையை விடுத்து, “கபால மலையில் பலியான கபாலீஸ்வரரே போற்றி!” என்னும் முழக்கத்தை முன்னெடுக்க வேண்டும்.

இரண்டாவது சைவக் கோவில் – சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவில். பிற்காலச் சோழர்களால் பொன்வேயப்பட்டதால் சைவத்தின் தலைமைக் கோவிலாக அக்கோவில் விளங்கி வருகிறது.

கபாலஸ்தலம் என்பது மண்டை ஓடு இருக்கும் இடம் என்று சிலர் நினைக்கிறார்கள். அது தவறு! யார் கொலை செய்யப்பட்டாலும் அந்த உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். கபாலஸ்தலம் என்பது ஒரு குன்று. அதற்குரிய விளக்கத்தைத் திருவிவிலிய அகராதி தெளிவாகச் சொல்கிறது. கபால மலையில் இயேசு பெருமான் பலியான காரணத்தால் – அவருக்குக் கபாலீஸ்வரர் என்று பெயர் வந்தது.

புனித தோமாவின் நினைவிடத்தில் கட்டப்பட்ட கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு 1566இல் போர்த்துக்கீசியர்கள் கிறித்தவ அடிப்படையிலான கோவிலைக் கட்டியிருக்கிறார்கள். இந்த வரலாறு வெளி வரக்கூடாது என்னும் அடிப்படையில் தான் கோவிலின் அருள்தந்தை, அவர்க்கு மேல் பொறுப்பில் இருக்கும் ஆயர், அவர்க்குத் தலைமை தாங்கும் போப்பாண்டவர் ஆகியோர் சதி செய்திருக்கிறார்கள்.

கபாலீஸ்வரர் கோவிலை இடித்த போது, அங்கிருந்த சிலைகள் சாந்தோம் பேராலயத்தில் இருந்தன. நடராஜர் சிலை, சாந்தோம் பேராலயத்தில் இருந்தது. அதற்குத் தான் அங்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது சிலை அங்கு இல்லை. இந்து மதச் சிலை அங்கு இருக்கக்கூடாது. அப்படி இருந்தால், அது வரலாற்றை நினைவுபடுத்தும். வரலாற்றை அழிப்பதற்காக, அந்தச் சிலையைக் காணாமல் போய்ச் செய்து விட்டார்கள். கத்தோலிக்கப் போப்பாண்டவர் ஒருவரே, புனித தோமா தென்னிந்தியா வரவேயில்லை என்று சொன்னார்.

இந்தச் சிலை மாயமானது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கிறோம்.

கபால மலை என்று ஏன் பெயர் வைத்தார்கள்?
கபாலம் என்றால் மண்டையோடு. மண்டையோட்டு வடிவில் அந்த மலை இருப்பதால் அந்த மலைக்குக் கபால மலை (கொல்கதா) என்று பெயர்.

நானே கடவுள் என்ற கொள்கை பிராமணர்கள் உடையது என்றால், இயேசு பெருமானும் அதையே தானே சொன்னார். இரண்டுமே அத்வைதக் கொள்கையா?
“நானே அவரென்று அறிந்து கொள்ளுங்கள்” என்று கடவுளே சொல்வதும் மனிதர்கள் – ‘நானே கடவுள்’ என்று சொல்வதும் ஒன்றாகாது அல்லவா! இத்துடன் சேர்ந்து நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று – இயேசு பெருமான் வாழும் காலத்தில் சொன்னதையும் அவர் உயிர்த்தெழுந்த பின்பு சொன்னதையும் தனித்தனியே பிரித்துப் பார்த்து புரிந்து கொள்வது சரியான புரிதலாக இருக்கும்.

தோமாவழித் தமிழர் சமயம் என்பது சரியா? தோமாவழிக் கிறிஸ்தவம் என்பது சரியா?
தோமாவழிக் கிறிஸ்தவம் என்று சொன்னால் அது கிறிஸ்தவ மதத்தின் ஒரு பகுதி என்று பொருள் ஆகிவிடுகிறது. எனவே தோமாவழித் தமிழர் சமயம் என்று சொல்வது தான் சரியானது.

“இந்தியா தோமாவழித் திராவிட கிறிஸ்தவ நாடு” என்று முனைவர் தெ. தேவகலா புத்தகம் எழுதியிருக்கிறார்களே! அந்தத் தலைப்பை எப்படிப் புரிந்து கொள்வது?
அந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் இயேசு வேறு! கிறிஸ்து வேறு என்னும் உண்மை வெளிப்படவில்லை. இப்போது அந்த உண்மை புரிந்த இந்தக் காலத்தில் தோமாவழித் திராவிட கிறிஸ்தவம் என்று சொல்வது பொருத்தமாக இல்லை. தோமாவழித் தமிழர் சமயம் என்பது தான் பொருத்தமாக இருக்கிறது.

தண்ணீர் திருமுழுக்கு சரியா?
திருத்தூதர் (அப்போஸ்தலர்) 1:5 இல் தண்ணீர் திருமுழுக்கு முடிந்துவிட்டது என்று இயேசு பெருமான் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்ன பிறகும் தண்ணீர் திருமுழுக்குக் கொடுப்பது தவறு அல்லவா! அதற்குரிய முயற்சியை எடுக்கத் தொடங்கலாம்.

இயேசுபெருமானே தண்ணீர் திருமுழுக்கு கொடுத்திருக்கிறாரே!
அவர் உயிரோடு இருக்கும் போது தண்ணீர் திருமுழுக்கு கொடுத்தார். உயிர்த்தெழுந்த பிறகு, “தண்ணீர் திருமுழுக்கு வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறார். எனவே தண்ணீர் திருமுழுக்கு தேவையில்லை அல்லவா!

(தமிழர் ஆன்மவியல் ஞானசபை வாரக் கூட்டத்தில் 06.05.2020 அன்று பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆற்றிய உரை)

Standard
தமிழர் சமயம்

சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்ட நடராஜர் சிலை – மீட்கப்படவேண்டும்

என்னுடைய 86 ஆண்டுகளைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆருயிர் முறைவழிப்படூஉம் என்பதைத் தான் நான் உணர்கிறேன். என்னுடைய முயற்சியால் பெரிய காரியங்கள் நடந்தன என்று சொல்ல முடியவில்லை. ஆனால் உணர்த்த உணர்தலை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் அவரே கொடுக்கிறார். என்னை விடச் சிறந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் கடவுளே என்னை அழைத்துப் பல முறை பேசினார். அவரே வழிநடத்தினார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உள்ளத்தால் பேசி உணரத் தான் முடியும்.

இந்த வாரம் – இந்தத் தலைப்பில் தான் பேச வேண்டும் என்று நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் என்னை அறியாமல் ஒரு காரியம் நடந்தது. அருள்தந்தை அடைக்கலம் The St. Thomas Cathedral Museum என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதைப் படிக்க நேர்ந்தது. அந்தப் புத்தகத்தில் சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் ஐந்தாம் எண் சிலையாக நடராஜப் பெருமான் வைக்கப்பட்டிருந்ததை அவர் குறிப்பிடுகிறார். அந்தச் சிலை முதலில் பேராலய வராண்டாவில் இருந்திருக்கிறது. அதன் பிறகு அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தச் சிலை இன்று சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் இல்லை. இதைப் பற்றிய என்னுடைய கடிதத்தை இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

பெறுநர்

தலைமைச்செயலாளர் அவர்கள்,

தமிழக அரசு, ஜார்ஜ் கோட்டை,

சென்னை – 600009

பொருள்: சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜப் பெருமான் சிலை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி மறைத்து வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடராஜப் பெருமான் சிலை மீட்கப்பட வேண்டும்.

  1. சாந்தோம் பேராலய வராண்டாவில் இருந்த நடராஜப் பெருமான் சிலையை, சாந்தோம் பேராலயப் பங்குத் தந்தையாக இருந்த அருள்தந்தை அடைக்கலம் அவர்கள், பதிவு எண் 5 என்று குறித்து சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் சேர்த்த செய்தி The St. Thomas Cathedral Museum என்னும் தலைப்புள்ள நூலின் 4,5 ஆகிய பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. புத்தகத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  2. “சாந்தோம்” என்னும் பெயர், புனித தோமா அடக்கம் செய்யப்பட்ட இடம் என்னும் வரலாற்றை விளக்கும் பெயராகும்.
  3. புனித தோமா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் புனித தோமாவின் அடியவர்களால் கட்டப்பட்ட கோவிலே, புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதத்தைச் சேர்ந்த கபாலீஸ்வரர் கோவில் என்று இப்பொழுதுள்ள கபாலீஸ்வரர் கோவிலின் தலைவாசலில் உள்ள கல்வெட்டுக் கூறுகிறது.
  4. அந்தக் கபாலீஸ்வரர் கோவிலைக் கி.பி. 1566இல் போர்த்துக்கீசிய கத்தோலிக்கர்கள் இடித்து விட்டு, அந்த இடத்தில் கட்டப்பட்டிருப்பதே இப்பொழுது இருக்கும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சாந்தோம் பேராலயம் என்று அக்கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  5. கத்தோலிக்கர்களால் இடிக்கப்பட்ட முதல் கபாலீஸ்வரர் கோவில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய சைவ சமயத் தலைவர்களால் பாடல் பெற்ற தலம் என்று மேலே கூறப்பட்டுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.
  6. மேலும் இறந்து போன பூம்பாவை என்னும் பெண்ணின் எலும்பைத் திரும்பப் பெண்ணாக்கித் திருஞானசம்பந்தர் பெற்றோரிடம் சேர்த்த செய்தியும் அக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
  7. நடராஜப் பெருமான் என்பது இயேசு பெருமான் சிலுவையில் பலியாகி அடக்கம் செய்யப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, மகிழ்ச்சிக் கூத்தாடிய கூத்தைக் காட்டுவது என்பதை டாக்டர் தேவகலா விளக்கியிருப்பது 2020 ஜுன் மாதத் தமிழர் சமயம் இதழில் விளக்கப்பட்டுள்ளது. அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
  8. இதனால் புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மதக் கோவிலில் நடராஜப் பெருமான் சிறப்பிக்கப்படுவது இயல்பேயாகும்.
  9. இந்த இயல்பின்படியே, புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்துமதக்கோவிலாகிய கபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டு அந்த இடத்தின் மீது கட்டப்பட்டுள்ள சாந்தோம் பேராலயத்தின் வராண்டாவில் நடராஜர் சிலை இருந்ததும் அதை அந்தக் கோவிலின் அருள்தந்தை அடைக்கலம் அவர்கள் சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் இடம் பெற வைத்ததும் இயல்பானவையே ஆகும்.
  10. ஆகவே, புனித தோமா வழித் தமிழர் சமயமாகிய இந்து மத வரலாற்றை உலக மக்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கும் நடராஜப் பெருமான் சிலை திருடப்பட்டவர்களிடம் இருந்து மீட்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.
  11. அருள்தந்தை அடைக்கலம் அவர்களை, சாந்தோம் பேராலயத்தில் அருங்காட்சியகம் அமைக்குமாறு ஏவியவர், அப்பொழுது சென்னை – மயிலைப் பேராயராக இருந்த, பேரருள் பெருந்தகை டாக்டர் ஆர். அருளப்பா அவர்கள் என்று “The St. Thomas Cathedral Museum” என்னும் இந்த நூலை 24.7.1985இல் எழுதிய அருள்தந்தை அடைக்கலம் அவர்கள் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
  12. 1968இல் திருவள்ளுவர் கிறிஸ்தவரா? என்னும் தலைப்பில் நான் எழுதியிருந்த நூலுக்கு முன்னுரை வாங்க, நான் சென்ற பொழுது, ஏற்பட்ட தொடர்பு 1996இல் பேராயர் டாக்டர் ஆர். அருளப்பா அவர்கள் இறக்கும் வரை தொடர்ந்து சிறப்பாக இருந்தது.
  13. புனித தோமாவின் நற்செய்திப் பணி பற்றி நான் ஆராய்ந்து நூல்கள் வெளியிடுவதற்குக் கடவுளுக்கு அடுத்த நிலையில் எனக்கு அனைத்து வகைகளிலும் துணையாய் இருந்தவர் பேராயர் டாக்டர் R. அருளப்பா அவர்களே என்பதை என்னோடும் பேராயரோடும் தொடர்புடைய அனைவரும் அறிவர்.
  14. 1968 முதல் இன்றுவரை, இந்த ஆராய்ச்சியில், நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களும் 1984 முதல் இன்று வரை திராவிட சமயம், தமிழர் சமயம் என்னும் தலைப்பில் மாத இதழ் நடத்தி வருவதையும் அனைவரும் அறிவர். இதனால் புனித தோமாவின் தமிழக நற்செய்திப்பணி பற்றி, யார் என்ன கேள்வி கேட்டாலும் கேட்கின்றவர் ஏற்றுக் கொள்ளும் வகையில் பகுத்தறிவு வழியில் பதில் சொல்ல கடவுள் என்னை ஆயத்தப்படுத்தியுள்ளார். என் வயது 86 ஆகின்றது.
  15. ஆகவே, சாந்தோம் பேராலய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நடராஜப்பெருமான் சிலையை அருங்காட்சியகத்தில் இருந்து திருடி மறைத்து வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டு நடராஜப் பெருமான் சிலை மீட்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
மு. தெய்வநாயகம்.

(28.06.2020 அன்று முனைவர் மு. தெய்வநாயகம் அவர்கள் ஆன்மவியல் ஞானசபையில் இயங்கலை வழி ஆற்றிய உரை)

Standard
தமிழர் சமயம்

புனித தோமா இந்தியா வரவில்லையா?

புனித தோமா இந்தியா வந்தாரா?  இல்லையா?  என்னும் கேள்விகள் இருக்கின்றன.

புனித தோமா தமிழகம் வரவில்லை எனக் கத்தோலிக்கத் திருச்சபையினர் நம்புவதற்குத் தங்களுடைய (சாந்தோம்) தேவாலயம் இடிக்கப்பட்டு விடும் என்னும் தவறான நம்பிக்கையே காரணம்.

புனித தோமா தமிழகம் வந்தார். சென்னையில் 3 இடங்களில் புனித தோமா தமிழ்நாடு வந்ததற்கு அடையாளம் இருக்கிறது.
1) குத்தப்பட்ட இடம் –
2) இறந்த இடம்
3) அடக்கம் செய்யப்பட்ட இடம்

அவர் இறந்த நாளாகிய ஜூலை 3ஆம் நாள் இறந்த நாள் தோமா நினைவுநாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

கபாலீஸ்வரர் என்பதன் பொருள் கபால மலையில் பலியான ஈசன் என்பதாகும். மத்தேயு 27:33 லூக்கா 23:33, யோவான் 19:17 மண்டையோட்டு இடம் (கொல்கதா) அல்லது கபாலஸ்தலம் என்று குறிக்கப்படுகிறது.

கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து மன்னர் தோமா கோவிலைச் சிறப்பித்திருக்கிறார். மார்க்கோபோலோ தோமா கோவிலைப் பற்றி எழுதியிருக்கிறார்.

கி.பி.16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் தமிழ்க் கோவிலைப் பற்றிய சரியான புரிதலின்மையால் அக்கோவிலை இடித்தனர். 1896இல் தற்போதுள்ள சாந்தோம் பேராலயம் கட்டப்பட்டுள்ளது. போப் 16ஆம் ஆசிர்வாதப்பர் புனித தோமா இங்கு வரவில்லை என்று அறிவித்தார்.

ஏன் இந்தக் குழப்பம்?

கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்து ஆராய்ச்சி செய்யாமல், கி.பி. 4ஆம் நூற்றாண்டில் சீரியக் கிறிஸ்தவர்களை ஆராய்ச்சி செய்ததால், குழப்பம் நீடிக்கிறது.

கனானியராகிய தோமாவின் தலைமையில் சீரியர்கள் வந்தனர். இந்தத் தோமா வேறு! புனித தோமா வேறு! அவர்கள் வந்த இடம் கேரளம்! புனித தோமா வந்த இடம் தமிழகம்! இங்கே தேடாமல் அங்கே தேடினால் எப்படி உண்மை கிடைக்கும்?

போப்பாண்டவர் பதவி என்பதே அரசியல் தலைவருக்கு உரிய பதவிதான்! அவர் ஒரு நாட்டின் தலைவராகத் தான் இருக்கிறார். போப்பாண்டவர்களில் இரண்டாம் ஜான் பால் தவிர( அவரும் ஐரோப்பியர் தான்!) , மீதி அனைவரும் ரோம அரச வழி வந்தவர்கள் தான்.

புனித தோமாவின் கல்லறை இத்தாலியில் இருப்பதாகச் சொல்கிறார்களே!

இடசா என்னும் இடத்திற்கு அவருடைய எலும்பு போய் இருக்கிறது. பிறகு இத்தாலிக்கும் கொண்டு சென்றார்கள். இது தோமாவைச் சிறப்பிக்கச் செய்யப்பட்டவை தான்!

 

 

Standard