சமூகம்

கொரோனா – சிந்திப்போம் சில நொடிகள்!

‘வந்துட்டேன்னு சொல்லு! திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!’ இந்த வசனத்தை மட்டும் தான் இன்னும் கொரோனா சொல்லவில்லை. ஊரெங்கும் கொரோனாவைப் பற்றித் தான் பேச்சு! அண்ணாச்சிக் கடையில் இருந்து அமெரிக்கா வரை பேசுபவர்கள் எல்லாருமே – கேள்விப்பட்டீகளா? கொரோனா வந்திருச்சாமே! என்கிறார்கள்.

போன ஆண்டு கொரோனா என்று சொன்ன போது ‘கொரோனா என்றால் பலருக்கும் என்னவென்றே தெரியாது!’ முழு ஊரடங்கு தான் தீர்வு என்று நினைத்தோம். “வீட்டிலேயே இரு! விழித்திரு! தனித்திரு” என்று தமிழக முதல்வரும் சொன்னார். ஒவ்வொரு பதினைந்து நாட்களாக ஊரடங்கை நீட்டிக் கொண்டே போனார்கள். அப்போது வேறு வழியில்லை! ஏனென்றால் கொரோனா என்றால் என்னவென்றே தெரியாது! பல நாடுகளில் கொரோனாவால் பலர் இறந்து போனதாகச் செய்தித்தாள்கள் தெரிவித்தன.

ஊரடங்குக்குப் பிறகு அதிகமான நோய்ப்பரவல்:

ஆனால், இந்த ஆண்டு நிலை அப்படிப்பட்டதில்லை. ஊரடங்கு வந்த பிறகு தான், கொரோனா அதிகமானது என்பதும்

ஊரடங்கு போடப் போட கூடிய கொரோனா

நன்றி: நிர்மல், இன்போசீட்ஸ்

ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக விலக்கப்பட்ட தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் நாட்களில் கொரோனாவின் தீவிரம் குறைந்திருந்தது என்பதும் ஊரறிந்த ரகசியம். அதனால் தானோ என்னவோ, பிரதமரே கூட, ‘பொது ஊரடங்கு தீர்வில்லை’ என்று இப்போது பேசுகிறார்.

ஆனால், தமிழக அரசு அதிகாரிகளோ பிரதமர் பேசியதற்கு மாறாக, வேறு ராகம் பாடுகிறார்கள்.

ஊரடங்கு இல்லை – பிரதமர் மோடி

(இணைப்பு: https://www.wionews.com/india-news/no-lockdown-pm-modis-address-to-nation-focuses-on-vaccination-and-prevention-378866)

தடுப்பூசியையோ ஊரடங்கையோ பற்றி அவதூறாகப் பேசினால் வழக்குத் தொடரப்படும் என்கிறார் சென்னை மாநகராட்சி ஆணையர். இப்போது பிரதமரே ஊரடங்கு தீர்வில்லை என்று பேசியிருக்கிறாரே! அவர் மீது சென்னை மாநகராட்சி வழக்கு தொடரப் போகிறதா? இது என்ன கேலிக் கூத்து!

கொரோனாவைப் பற்றிச் சாமானியனுக்குப் பல கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்வி ஒவ்வொன்றிலும் நியாயங்களே இல்லை என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாத அளவு வலுவான கேள்விகள் அவை.

ஊரடங்கு தான் தீர்வா?

ஊரடங்கால் மட்டும் தான் கொரோனா பரவாது, மக்கள் வெளியே வந்தாலே, கொரோனா பரவி விடும் என்றால்

  • ஊரடங்கு இல்லாத தீபாவளி, பொங்கல் நாட்களில் கொரோனா குறைந்தது எப்படி?
  • ஏப்ரல் மாதம் எப்படி தமிழகத் தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா பரவவில்லை?
  • நேற்று வரை – உள்துறை அமைச்சர் அமித்ஷா மாபெரும் கூட்டத்தை மேற்கு வங்கத்தில் கூட்டியிருக்கிறாரே! அங்கே தானே கொரோனா உச்சத்தைத் தொட்டிருக்க வேண்டும்?
  • அதுவும் இல்லை! தேர்தலே நடக்காத மகாராஷ்டிராவில் எப்படிக் கொரோனா அதிகமாக இருக்கிறது?

இதைப் பற்றி அரசு ஏதாவது ஆராய்ச்சி நடத்தியிருக்கிறதா? ஒன்றுமில்லை.

விதிப்பதும் அரசே! மீறுவதும் அரசே!

சரி! அரசு சொல்வது போல, ஊரடங்கு தான் தீர்வு என்றே வைத்துக் கொள்வோம். இங்கே நடப்பது என்ன? அரசே ஒரு பக்கம் ஊரடங்கைப் பற்றிப் பேசுகிறது. மறுபக்கம் டாஸ்மாக்கைத் திறக்கிறது. டாஸ்மாக்கோடு பாரையும் திறக்கலாம். அங்கெல்லாம் கொரோனா பரவாது. இரவு 10 மணிக்கு மேல் ஊரடங்கு – சாமானியர்கள் வெளியே எங்கும் செல்லக் கூடாது. ஆனால் இரவு 11 மணி வரை ஐ பி எல் போட்டி நடக்கலாம். இது எந்த வகையில் சேர்த்தி? ஒருபக்கம் “ஊரடங்கு ஊரடங்கு” என்று பேச வேண்டும். ஊரடங்கை விமர்சித்தால் வழக்கு என மிரட்ட வேண்டும். இன்னொரு பக்கம் இப்படி ஊரடங்கை அரசே மீற வேண்டும். அரசு மீறினால், அதில் கொரோனா பரவாது போல!

தியேட்டர்களில் 50% (ஏசி போட்டு காற்றை அடைத்தாலும் பரவாயில்லை) பேர் படம் பார்க்கலாம். ஆனால், அதே போல, பள்ளிகளையும் கல்லூரிகளையும் 50% (காலை, மாலை என்று) கொஞ்சமாவது நடத்தலாமே என்றால் – லூசாப்பா நீ? கொரோனா பரவி விடாதா? என்று கேட்கிறார்கள்.

பேருந்துகளை இரவு நேரங்களில் இயக்காமல் நிறுத்துகிறார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையையும் பயண காலத்தையும் குறைப்பதால் தானே மக்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும் நெருக்கடி உண்டாகிறது? மக்கள் கூடுகை தான் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் பேருந்துகளின் எண்ணிக்கையைக் கூட்டுவது தானே தீர்வு? அதற்கு நேர் எதிராகக் குறைப்பது எப்படித் தீர்வாகும்?

சரி! பேருந்துகள் ஓடாது என்பதையும் தீர்வு என்றே வைத்துக் கொள்வோம். அதே இரவு நேரத்தில் தொடர்வண்டிகள் ஓடுகின்றன. அதிலும் ஏசி கோச்சுகளும் இருக்கின்றன. வேகமாக ஓடும் டிரெயினைப் பார்த்தால் கொரோனா அண்டாதா என்ன?

ஞாயிறு முழு ஊரடங்கு என்று அரசே அறிவிக்கிறது. அதே ஞாயிறு அன்று சென்னையில் மெட்ரோ ரயில்கள் ஓடும் என்றும் அதே அரசே அறிவிக்கிறது. இப்போது முழு ஊரடங்கை மீறுவது அரசா? மக்களா?

முமு ஊரடங்கில் இரயில்கள் இயங்கினால் அது எப்படி முழு ஊரடங்கு?

இணைப்பு: https://www.maalaimalar.com/news/district/2021/04/23212716/2558337/Tamil-News-Metro-Rail-administration-announcement.vpf

முகமூடி தான் தீர்வா?

முகமூடி முகமூடி என்கிறீர்களே! முகமூடி என்றால் N95 முகமூடி தான் என்று உலக சுகாதார நிறுவனம் முதலில் சொன்னது! இங்கே நானும் நீங்களும் அணிவது என்ன வகை முகமூடி? சாதாரண துணி! கொரோனா என்று அரசு சொல்வது ஒரு வைரஸ். கண்ணுக்கே தெரியாத நுண்கிருமியை ஒரு துணி எப்படித் தடுத்து நிறுத்தும்? சரி, அதையும் ஒருவகையில் ஏற்றுக் கொள்வோம். முகமூடியைத் தொடர்ந்து அணிவதால் தானே, மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் வரும்? கொரோனா என்பது மூச்சு தொடர்பான ஒரு நோய் தானே! அப்படியானால் முகமூடி தானே கொரோனாவைக் கூட்டும்?

இதோ கீழே பாருங்கள் – அமெரிக்கக் கல்வி அதிகாரி பள்ளிகளில் முகமூடி கட்டாயம் இல்லை என்று சொல்லும் செய்தி!

முகமூடியால் பலன் இல்லை என்கிறார் அமெரிக்கக் கல்வி அதிகாரி

(இணைப்பு: https://www.forbes.com/sites/alisondurkee/2021/04/15/florida-education-commissioner-tells-schools-to-drop-mask-mandates-they-serve-no-remaining-good/?sh=ff2d0eb5a6fb)

சரி! முகமூடி தான் தீர்வு என்று அரசு சொல்வதையும் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம்.

  • தமிழகத்திலும் கேரளத்திலும் அசாமிலும் தேர்தல் நடந்த போது பேசிய தலைவர்களில் எத்தனை பேர் முகமூடி அணிந்திருந்தார்கள்?
  • அவர்களில் எத்தனை பேரிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது?

அப்படியானால் அரசே தன்னுடைய முடிவுகளை ஆள் பார்த்துத் தான் செயல்படுத்துகிறதா?

சட்டம் மக்களுக்கு மட்டும் தான் – தலைவர்களுக்கு இல்லை!

தடுப்பூசி தீர்வாகுமா?

இது தடுப்பூசியே இல்லை – வெறும் தண்ணீர்! என்று கோவக்சினும் கோவிஷீல்டும் அடித்துக் கொண்டார்கள். அது தனிக்கதை!

தடுப்பூசியா? தண்ணீரா?

(ஆதாரம் வேண்டுவோர் பாருங்கள்: https://www.hindustantimes.com/india-news/phase-3-covaxin-data-in-feb-or-march-bharat-biotech/story-QetWiqSy1ATBaKooOjWHsN.html)

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி இதயத்தில் இரத்த அடைப்பை ஏற்படுத்துகிறதே என்று அந்நிறுவனத்தைக் கேள்வி கேட்டார்கள்.

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி இரத்த அடைப்பைக் கொடுக்கும்

(இணைப்பு: https://www.bbc.com/news/world-us-canada-56733715)

‘என்னைக் குறை சொல்கிறாயே! உன் இலட்சணம் என்ன தெரியுமா? ‘ என்று நம்மூர் அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்டால் இன்னொரு கட்சியைச் சாடுவார்களே அதைப் போல, மீதி தடுப்பூசிகளால் தான் இரத்த அடைப்பு வரும் என்று ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ கதையைச் சொன்னது ஜான்சன் & ஜான்சன்.

(இணைப்பு: https://cdn.cnn.com/cnn/2021/images/04/18/jj.statement.png)

தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்னர், ஒருவரிடம் என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்வது தானே அடிப்படை அறிவியல்?

தடுப்பூசி போடுவதற்கு முன் உடல் பரிசோதனை தேவை – மருத்துவ நிபுணர்கள்

(இணைப்பு: https://www.newindianexpress.com/cities/bengaluru/2021/mar/12/get-antibody-tests-before-and-after-covid-19vaccine-shot-experts-2275483.html)

ஆனால் இங்கே நடந்தது என்ன? தடுப்பூசி போடுவதற்கு முன்பு எந்தச் சோதனையும் செய்யாமல் 12 கோடிப் பேருக்கு ஊசி போட்டிருக்கிறது அரசு. இதில் எத்தனை பேருக்கு என்னென்ன பக்க விளைவுகள் வந்தன? எத்தனை பேர் இறந்தார்கள் – ஏதாவது ஒரு புள்ளி விவரம் இருக்கிறதா? எந்தப் புள்ளி விவரத்தையும் வெளிவிடாத அரசை நம்புவதில் சாமானியனுக்குச் சிக்கல் இருக்கிறது தானே!

சரி, கொரோனா தடுப்பூசி என்கிறீர்களே! அது கொரோனாவைத் தடுத்து விடுமா? என்று கேட்டால் ‘அப்படியெல்லாம் சொல்ல முடியாது! ஓரளவு குணப்படுத்த முடியும்’ என்கிறார்கள்.

இரண்டு தடுப்பூசிக்குப் பிறகும் இறந்து போன அரசு அதிகாரி

(இணைப்பு: https://timesofindia.indiatimes.com/india/chhattisgarh-joint-health-director-dies-of-covid-despite-taking-2-vaccine-jabs/articleshow/82075952.cms)

தடுப்பூசிக்குப் பிறகும் தொற்று – கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு

(இணைப்பு: tinyurl.com/43enpyzw)

உங்களால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தால் குணப்படுத்த முடியாத போது, சித்த மருத்துவர்கள் பரிந்துரைத்த கபசுரக் குடிநீரை அல்லவா அரசு ஆராய்ச்சிக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். அதைத் தானே உலக அளவில் கொண்டு சென்றிருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, எந்த உறுதிமொழியும் இல்லாத தடுப்பூசியைப் பற்றி ஏன் அரசு வலியுறுத்திப் பேசுகிறது?

தடுப்பூசிக்கு முன்னரே குறைந்த கொரோனா பரவல்:

Image
தடுப்பூசியால் பலனா? – படத்தைப் பார்த்தாலே தெரியும்.

(சான்று: https://github.com/owid/covid-19-data/tree/master/public/data/owid-owid-covid-data.xlsx)

தடுப்பூசிக்கு முன்னரே குறைந்த தொற்று:

சரி – தடுப்பூசி தான் தீர்வு என்பதையும் ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். அப்படிப்பட்ட தடுப்பூசியும் உலகத்திலேயே இந்தியாவில் தான் அதிக விலை என்கிறார்கள்.

உலகத்திலேயே இந்தியாவில் தான் தடுப்பூசி விலை அதிகம்:

அமெரிக்காவை விட இரண்டு மடங்கு விலை அதிகம் – இந்தியாவில்:

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

(இணைப்பு: https://indianexpress.com/article/india/serum-institute-covishield-price-india-world-7286635/)

உலகத்திலேயே

அந்த விலையும் மத்திய அரசுக்கு மட்டும் தான்! மாநில அரசு கேட்டால் 400 ரூபாய்! மாநில அரசு ஒரு நாட்டிலும் மத்திய அரசு வேறு நாட்டிலுமா இருக்கிறது? எப்படி இருக்கிறது பாருங்கள் இந்தப் பகல் கொள்ளை!

சரி! கொரோனா தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறதே என்று கேட்டால், கொரோனாவால் பத்தாயிரம் பேரில் ஒருவர் இறக்க வாய்ப்புண்டு, ஆனால், தடுப்பூசியால் 10 கோடிப் பேரில் ஒருவருக்குத் தான் அந்த வாய்ப்பு என்று கணக்குச் சொல்வார்கள்.

கொரோனாவே வராத ஒருவர் கூட, அரசின் வழிகாட்டுதல் படி, தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் என்பது அரசின் வாக்குறுதியில் அவருக்கு இருக்கும் நம்பிக்கை தானே! அரசை நம்பும் அவர், ஒருவேளை உயிரிழக்க நேர்ந்தால் அரசு செய்ய வேண்டியது என்ன? குறைந்தபட்சம் நஷ்ட ஈடாவது கொடுக்க வேண்டாமா? அதுவும் கிடையாது.

சரி, அரசு சொல்வது போலப் 10 கோடியில் ஒருவர் தான் இறப்பார் என்பது அறிவியல் உண்மை என்றால், 100 கோடி பேரும் தடுப்பூசி போட்டால் கூட, பத்துப் பேர் தானே இறந்து போவார்கள். வெறும் பத்துப் பேருக்கு நஷ்ட ஈடு கொடுக்க அரசால் முடியாதா? அப்படி நஷ்ட ஈடு கொடுக்க மாட்டோம் என்று அரசு பிடிவாதமாகச் சொல்வதிலேயே அரசோ மருத்துவர்களோ சொல்லும் 10 கோடிக்கு ஒருவர் தான் என்னும் வாதம் பொய் என்று பல்லிளித்து விடுகிறது.

10 கோடியில் ஒருவர் தான் இறப்பார் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாக இருந்தால் – காப்பீட்டு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு திட்டங்களை அறிவித்திருப்பார்களே! அப்படியும் ஏதும் இல்லையே!

கொரோனா தடுப்புக்கான முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா காப்பீடு அறிவித்திருக்கிறார்கள். ஆனால், இன்று வரை அவர்களில் எத்தனை பேர் கொரோனாவால் இறந்தார்கள் என்பது பற்றி எந்த அதிகாரப் பூர்வத் தகவலும் கிடையாது.

முன்களப் பணியாளர்கள் இறப்பு பற்றித் தகவலே இல்லாத இந்திய அரசு

(பார்க்க: https://www.newindianexpress.com/nation/2021/apr/18/corrigendum-centre-cancels-existing-insurance-policy-for-healthcare-workers-who-succumbin-the-line-o-2291639.html)

இந்த லட்சணத்தில் பாமரனுடைய உயிருக்கு உத்தரவாதத்தை இந்த அரசு தந்து விடும் என்பது நீர் மேல் எழுத்துத் தான்!

இப்படியாக, எத்தனை கேள்விகள் கேட்டாலும் விடை இல்லை! கேட்டால் ஒரே பதில் தான் – நம்பு! அரசு சொல்வதை நம்பு! இது தான் அறிவியலா?! நம்புவது எப்படி அறிவியலாகும்? கேள்வி கேட்பதும் அதற்கு விடை தேடுவதும் தானே அறிவியல்?

ஊரடங்கையும் முகமூடியையும் தடுப்பூசியையும் ஆதரிப்பது என்பது அரசின் கொள்கை முடிவாக இருக்கலாம். அது நல்ல நோக்கத்திற்காகக் கூட இருக்கலாம். ஆனால், அரசின் கொள்கை முடிவை விமர்சிப்பது என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. டாஸ்மாக் நடத்துவது அரசின் கொள்கை முடிவுதான்! அதை எதிர்த்துப் பேசுவது நம்முடைய அடிப்படை உரிமை அல்லவா! அதைப் போலத் தானே தடுப்பூசியையும் முகமூடியையும் ஊரடங்கையும் எதிர்ப்பதும்! ஆதரிப்பவர்கள் எப்படிச் சமூகத்திற்காகச் சிந்திக்கிறார்களோ, அதைப் போலவே தான் எதிர்ப்பவர்களும்! இருவருக்குமே சமூக நலன் தான் முக்கியம்!

எனவே, விருப்பு வெறுப்புகளைக் கடந்து, கொரோனாவிற்கு எங்களிடம் மருந்து இல்லை, எங்களுடைய தடுப்பூசியும் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்காது என்று ஆங்கில மருத்துவம் வெளிப்படையாகவே அறிவித்த பிறகும் கூட, ஹோமியோபதி, சித்தமருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர் என்று பிற மருத்துவ அறிஞர்களிடம் அரசு கலந்து பேசியதாகத் தெரியவில்லை. அவர்களுடைய கருத்துகளுக்கு உரிய மதிப்பு இருப்பதாகவும் தெரியவில்லை. வழி தெரியாமல் விழி பிதுங்கி அரசு நிற்கும் இந்தக் காலத்தில் கூட, அவர்களிடம் கலந்து பேசாமல் இருப்பது, மக்களின் உயிர் மீது அரசுக்கு அக்கறை இல்லையோ என்ற சந்தேக விதையை சாமானியனிடம் விதைத்து விடும். எல்லா நோய்களையும் விடப் பெரிய நோய், சந்தேகம் தான்! அது ஒரு முறை வந்து விட்டால் போக்குவது மிகக் கடினம். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்வது அரசுக்கு அழகாகத் தெரியவில்லை.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை. (திருக்குறள் 555)

பொருள்:

கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.

Standard
சமூகம்

கொரோனா – தடுப்பூசி தீர்வாகுமா?

தடுப்பூசியின் அடிப்படை என்ன?
கொரோனா வைரசைப் பிடித்து அதன் வீரியத்தைக் குறைத்து உடலில் செலுத்தும் போது உங்கள் எதிர்ப்புச் சக்தி கூடுகிறது. பின்னர், எப்போதாவது ஒருவருக்குக் கொரோனா வந்தால் நம் உடல் ஞாபகம் வைத்து எதிர்ப்புச் சக்தியை வெளிப்படுத்தும். இது தான்!

இப்போது ஒருவர் உடலில் கொரோனா வைரசை தடுப்பூசி என்னும் பெயரில் செலுத்திய பிறகு, அவருக்கும் சாதாரணமாகக் கொரோனா வந்த ஒருவருக்கும் என்ன வித்தியாசம்? ஒன்றும் கிடையாது. அப்படியானால்,

கொரோனா தடுப்பூசியை ஒருவருக்குச் செலுத்தியது பிறகு அவர் உடலில் கொரோனா வைரஸ் இருக்கும் தானே! கொரோனா வந்தவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வது போல, தடுப்பூசி போட்டுக் கொண்டவரும் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாமா? அவருடைய மூச்சில் இருந்து கொரோனா பரவாதா?

இத்தோடு,

சரி, ஒருவேளை நாங்கள் உங்களுக்குச் செலுத்தியது வீரியம் குறைந்த கொரோனா வைரஸ் தானே, அதனால் அது மற்றவர்களுக்குப் பரவாது அல்லவா?
என்று இதற்கு விடை சொல்லலாம்.
அதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொள்வோம். அப்படியானால் – நீங்கள் வீரியம் குறைந்த கொரோனாவைத் தானே தடுப்பூசியாகப் போட்டிருக்கிறீர்கள். அது எப்படி வீரியத்துடன் வரும் கொரோனாவைத் தடுக்கும் என்னும் கேள்வி வந்து விடுகிறதே!

சரி, ஒருவேளை அது தடுக்கும் தான்! நீங்கள் விதண்டாவாதம் செய்கிறீர்கள் என்று சொல்வதையும் சரி என்றே வைத்துக் கொள்வோம். ஆங்கில மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? இப்போது வருவது பழைய கொரோனா இல்லை – உரு மாறிய கொரோனா, அதனால் தான் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிறார்கள்.

உரு மாறிய கொரோனாவை பழைய தடுப்பூசி எப்படித் தடுக்கும்?
அப்படியானால் இப்போது உரு மாறிய கொரோனாவிற்கான தடுப்பூசியைத் தானே செலுத்த வேண்டும். ஆனால் பழைய கிருமிக்கான தடுப்பூசியைத் தானே கொடுக்கிறார்கள்? அது எப்படி உருமாறிய கொரோனாவைத் தடுக்கும்?

ஒருவேளை, இந்தத் தடுப்பூசியே புதிய கொரோனாவைத் தடுக்கும் என்றால், ஆங்கில மருத்துவர்கள் ஏன் உரு மாறிய கொரோனாவைப் பெரிய விடயமாகப் பேச வேண்டும்?

முகக்கவசம் நுரையீரல் நோயைக் கூட்டுமா? குறைக்குமா?
கொரோனா வைரஸ் என்பது நுரையீரல் தொடர்புடைய ஒரு நோய். இது எல்லோரும் ஏற்றுக்கொள்வது. நுரையீரல் சரியாக வேண்டும் என்றால், ஒருவருக்கு நல்ல காற்று வேண்டும். அதை அவர் சுவாசிக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதோ அதற்கு நேர் மாறான செயல். கொரோனா வந்த பிறகு, அவரை முகக்கவசம் அணியச் சொல்வதன் மூலம் நல்ல காற்றை அவருக்குக் கிடைக்க விடாமல் செய்து விடுகிறோம். பிறகு எப்படி அவர் குணம் ஆவார்?

ஒருவேளை அவர் முகக் கவசம் அணியாவிட்டால் மற்றவர்களுக்குப் பரவி விடாதா? என்று நீங்கள் கேட்கலாம். அவர் முகக் கவசம் அணியாவிட்டால் மற்றவர்களுக்குப் பரவி விடும் சரி – அவர் முகக்கவசம் அணிந்தால் அவருக்குக் குணம் ஆகாது. அவருக்குக் குணம் ஆகவில்லை என்றால் அவர் மற்றவர்களுக்குப் பரப்பிக் கொண்டே தானே இருப்பார்? இதற்கு விடை இல்லையே!

முகக் கவசம் தீர்வாகுமா?
முகக்கவசம் அணியாத பகுதிகளில் கொரோனா பரவல் குறைவாக இருப்பதையும் முகக் கவசம் அணியும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதையும் பல்வேறு நாடுகளில் பார்த்த பிறகும் அதைப்பற்றிய எந்த அறிவியல் பூர்வமான கலந்துரையாடலையும் அரசு முன் எடுக்காதது ஏன்?
கீழே நீங்கள் பார்ப்பது அமெரிக்க மாநிலங்களின் நிலை. நீல வண்ண மாநிலங்கள் முகக்கவசம் கட்டாயம் என அறிவித்த மாநிலங்கள். அங்கே தான் கொரோனா அதிகமாக இருப்பதைப் பாருங்கள்.

Image


(இணைப்பு: https://twitter.com/kylenabecker/status/1383032541091889152/photo/1)

முகக்கவசம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை எனச் சொல்லும் அமெரிக்கக் கல்வித்துறை அதிகாரி:

(இணைப்பு: https://www.forbes.com/sites/alisondurkee/2021/04/15/florida-education-commissioner-tells-schools-to-drop-mask-mandates-they-serve-no-remaining-good/?sh=ff2d0eb5a6fb)

கீழே நீங்கள் பார்ப்பது, அமெரிக்காவின் டெக்சாஸ், புளோரிடா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் கொரோனா பரவல் மரணங்கள் பற்றிய புள்ளி விவரம். இந்த மூன்று மாநிலங்களில்

  • புளோரிடாவில் ஊரடங்கும் கிடையாது, முகக்கவசமும் கிடையாது.
  • டெக்சாசில் மார்ச் 10 2021 வரை ஊரடங்கும் முகக்கவசக் கட்டாயமும் இருந்தன.
  • கலிபோர்னியாவில் இன்றும் வரை ஊரடங்கும் முகக்கவசமும் கட்டாயம்.

ஆனால் படத்தைப் பாருங்கள். கொரோனா பாதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. மூன்று மாநிலங்களுமே ஏறத்தாழ ஒரே மாதிரியான பாதிப்பைத் தான் சந்தித்திருக்கின்றன.

Image

(இணைப்பு: https://twitter.com/JamesMelville/status/1383315028216926218/photo/1)

இவை தவிர மேலும் சில கேள்விகள்:
1) தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத போன ஆண்டு தீபாவளி, பொங்கல் ஆகிய நேரங்களில் மக்கள் கூட்டம் எல்லா இடங்களிலும் அலை மோதிய போது கொரோனா பரவவில்லையே! எப்படி?


2) மக்கள் வெளியே வருவதும் கூட்டமாகக் கூடுவதும் தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்றால், தேர்தல் நடந்த தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் மட்டும் தானே கொரோனா பரவல் கூடியிருக்க வேண்டும்? ஆனால் சம்பந்தமே இல்லாமல் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் எப்படி கொரோனா அதிகமாகப் பரவியது?


3) சரி, மக்கள் வெளியே நடமாடுவது தான் கொரோனா பரவலுக்குக் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இந்தியத் தேர்தல் ஆணையம் விடாமல் மேற்கு வங்காளத்தில் 8 கட்டமாகத் தேர்தல் நடத்துவேன் என்கிறதே! இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்?


4) காற்றோட்டமான ஒரு பகுதியில் ஒரு கிருமி பரவுவதைக் காட்டிலும் மூடிய காற்றோட்டம் குறைவான பகுதியில் தானே ஒரு கிருமி அதிகமாகப் பரவும்? அப்படியானால் இவர்கள் ஏன் காற்றோட்டம் அதிகமான பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு, ஏசி மூலம் காற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தும் திரையரங்கங்கள், பார்கள் ஆகியவற்றைத் திறக்கலாம் என்று சொல்வதன் அடிப்படை உண்மையிலேயே அறிவியல் தானா?

கோவக்சின், கோவிஷீல்டு
5) அரசு பரிந்துரைக்கும் கோவக்சின் மருந்து வெறும் தண்ணீருக்குச் சமமானது, என்று கோவிஷீல்டு மருந்து நிறுவனத்தின் தலைவர் அதர் பூனவல்லா (தலைவர், Serum Institute of India’s (SII) CEO, Adar Poonawalla) சொன்னார். அதற்கான எந்த மறுப்பும் அறிவியல் அடிப்படையில் கொடுக்கப்படவே இல்லையே ஏன்?

கோவக்சின் வெறும் தண்ணீர் தான் – கோவிஷீல்டு தலைவர் கருத்து

(இணைப்பு: https://www.hindustantimes.com/india-news/phase-3-covaxin-data-in-feb-or-march-bharat-biotech/story-QetWiqSy1ATBaKooOjWHsN.html)

6) கோவக்சின் மருந்து முறையாகச் சோதிக்கப்படாமலேயே மக்களுக்குச் செலுத்தப்படுகிறது. இதைப் பொது நலன் என்றோ அறிவியல் என்றோ எப்படி ஏற்றுக் கொள்வது?

முறையாகச் சோதிக்கப்படாத கோவக்சின்

(இணைப்பு: https://theprint.in/health/bharat-biotechs-covaxin-given-conditional-nod-based-on-incomplete-phase-3-trial-results-data/578389/)

கோவக்சின் முறையாகச் சோதிக்கப்படவில்லை – காங்கிரஸ் கேள்வி

(இணைப்பு: https://www.indiatoday.in/coronavirus-outbreak/vaccine-updates/story/-premature-dangerous-congress-leaders-over-approval-to-bharat-biotech-vaccine-without-phase-3-trials-1755441-2021-01-03)

இதை எல்லாம் தாண்டி, கொரோனா வைரசால் உலகமே எவ்வளவு பாடுபட்டது என்பதை நாம் அறிவோம். இப்படி இருந்தும் உலகத்தில் இருக்கும் எந்த அரசுகளுமே அதற்கு மருந்து கண்டுபிடிக்க ஆர்வம் செலுத்தவில்லை. ஏன்? எல்லா அரசுகளுமே இம்மருந்தைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்தன? தனியார் நிறுவனங்கள் ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி செலவழித்த பிறகு, எப்படியாவது அந்த மருந்தை விற்க வேண்டும் என்பதில் தானே ஆர்வம் செலுத்துவார்கள்? அதில் அறிவியலும் மக்கள் நலனும் பின்னுக்குத் தள்ளப்படும் என்பது இயல்பான ஒன்று தானே!

கொரோனாவிற்கு என்ன தான் தீர்வு?

அறிவியல் என்னும் பெயரில் என்றோ செய்யப்பட்ட உணவைப் பதப்படுத்திப் பதப்படுத்தி, பல நாட்கள் சாப்பிடுவதை விட்டு, நம்முடைய மரபைப் பின்பற்றி, மண்ணுக்கேற்ற உணவை உட்கொள்வதும் ‘பசித்துப் புசி’ என்று முன்னோர்கள் சொன்னதைப் பின்பற்றுவதும் தான் நம்முடைய உடலுக்கு உகந்தது. அதைப் பின்பற்றி வாழ்வது தான் ஒரே தீர்வு! “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

குறிப்பு:

தடுப்பூசிகள் பற்றிய அறிவியலையும் அரசியலையும் தெரிந்து கொள்ள – தடுப்பூசி வெளிப்படும் சில உண்மைகள் படியுங்கள். ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்.

இணைப்பு:

https://archive.org/details/thadupoosi/mode/2up

Standard
சமூகம்

கொரோனா என்னும் அறிவாளி!

கொரோனா கிருமி – உரு மாறி வரும் அறிவாளி என்று உங்களுக்கு ஏற்கெனவே தெரியும் அல்லவா? அது எவ்வளவு பெரிய அறிவாளி தெரியுமா?

  1. ஓட்டலுக்குச் சாப்பிடப் போகிறீர்களா? முகக்கவசத்தைக் கழற்றி நீங்கள் சாப்பிடும் போது கொரோனா வராது. சாப்பிட்ட உடன், உடனே, முகக்கவசத்தைப் போட்டுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், கொரோனா வந்து விடும். சாப்பிடும் போது ஒருவரைத் தாக்கக்கூடாது என்று கொரோனாவிற்குத் தெரியும்.
  2. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக வருகிறார்கள் அல்லவா? அவர்களைக் கொரோனா கிருமி தாக்காது.
  3. அஞ்சல் ஊழியர் வீடு வீடாக வந்து கடிதங்கள் கொடுக்கிறாரே! அவரைக் கொரோனா தாக்காது.
  4. குளிரூட்டப்பட்ட திரையரங்குகளில் முண்டியடித்துக் கொண்டு படம் பார்ப்பவர்களைக் கொரோனா தாக்காது. அவர்கள் தாம் – முகக்கவசம் அணிந்திருப்பார்களே என்று நினைப்பீர்கள்! இடைவேளையில் முகக்கவசத்தைக் கழற்றி, பாப் கார்னும் ஐஸ்கிரீமும் சாப்பிடும் போது கூட – கொரோனா வரவே வராது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
  5. குடிகாரர்களை? ம்ஹூம், கொரோனா அண்டவே அண்டாது.
  6. தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களில் மக்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கொரோனாவிற்கு நன்றாகத் தெரியும்.
  7. ஓட்டுப் போடும் போது கைக்கவசம் அணியாமல் வாக்குப்பதிவு இயந்திரத்தை அழுத்தினால் கொரோனா வந்து விடும். ஆனால், வெறும் கையை எல்லோரும் கை வைத்த அதே இடத்தில் வைத்து அதே பிரஷால் மை வைத்தாலும் கொரோனா வரவே வராது. வாக்குப்பதிவில் இடைஞ்சல் படுத்தக் கூடாது எனக் கொரோனாவிற்குத் தெரியும்.
  8. தேர்தல் பிரச்சாரங்களில் தலைவர்களே முகக்கவசம் அணிய மாட்டார்கள். ஆனால், அது பிரச்சாரக் கூட்டம் – இப்போது யாரையும் தாக்கக்கூடாது எனக் கொரோனாவிற்குத் தெரியும்.
  9. 10 ரூபாய்க்கு வாங்கி அணிந்தாலும் வராது, 100 ரூபாய்க்கு வாங்கி அணிந்தாலும் வராது. ஆமாங்க! முகக்கவசத்தைப் பார்த்தால் கொரோனாவிற்குக் கொஞ்சம் பயம்!
  10. ஏழைகளைக் கொரோனா ஒன்றும் செய்யாது! ஆமாங்க! தெருக்களில் காலாகாலமாய்த் தங்கியிருக்கும் பிச்சைக்காரர்களையும் கோவில் வாசலில் பிச்சை எடுப்பவர்களையும் கொரோனா தாக்கவே தாக்காது.

இப்போது சொல்லுங்கள் – கொரோனா அறிவாளியா? இல்லையா? ஒன்றே ஒன்று தான் அதற்குத் தெரியாது – என்ன என்கிறீர்களா?

தடுப்பூசி கண்டு பிடிப்பதற்கு முன்பே எங்கோ போய் இருந்த கொரொனா, அதன் பிறகு ஏன் சுழற்றி அடிக்கிறது என்று! (அட! இது நமக்கே தெரியாதே என்கிறீர்களா? அதுவும் உண்மை தான்!)

(சில கருத்துகள் – வாட்சப்பில் வந்த கருத்துகள் – சில கருத்துகள் அனுபவம்)

Standard