தமிழர் சமயம்

கிறிஸ்தவர் என்னும் பெயர் எப்போது உருவானது?

கிறிஸ்தவர் என்னும் பெயர் எப்போது உருவானது? இயேசு பெருமானைப் பின்பற்றியவர்களுக்கு முதலில் கிறிஸ்தவர் என்னும் பெயர் கிடையாது. அவர்கள் பரிசுத்த ஆவி நிரம்பியவர்களாக (சால்பு+ஆர்), இயேசு பெருமான் வாழ்க்கையை ஆண்மையுடன் சான்று கூறி(சான்று+ஆண்மை), மற்றவர்களுக்குச் சான்று கூறி (சான்று+அவர்) வாழ்ந்தவர்கள்.இதைத் தான் வடமொழியில் ‘சாட்சி’ என்று சொன்னார்கள்.

பைபிளில்:

“நீங்கள் என் சாட்சிகள்” அப்போஸ்தலர் 1:8

”நாங்கள் எல்லோரும் சாட்சிகள்” அப்போஸ்தலர் 2:32, 3:15, 5:32

எப்போது கிறிஸ்தவர் என்னும் பெயர் வந்தது?

கிறிஸ்தவர் என்னும் பெயரே அந்தியோகியாவில் தான் உருவானது. எருசலேமில் உருவாகவில்லை. எருசலேமில் அவர்களுக்குச் சாட்சிகள் என்று பெயர். சாட்சி என்பதற்குத் தமிழில் சான்றோன் என்று பெயர். சான்றோன், ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் என்று தமிழ் இலக்கியங்கள் முழுக்க இப்படிப்பட்ட சான்றுகளைப் பார்க்க முடியும்.

Standard