சமூகம்

மார்க்சிய தத்துவம் என்றால் என்ன? | சிந்தன் | இயக்கவியல் பொருள்முதல்வாதம்

பொருள்முதல்வாதம் என்றால் என்ன?
பொருட்கள் தாம் முதன்மையானவை.

கருத்து முதல் வாதம்:
உலகத்தை நாம் மாற்ற முடியாது. இங்கிருக்கும் துன்பங்களுக்குத் தீர்வு கிடையாது.

பொருள்முதல்வாதம்:
பொருட்களும் சிந்தனையும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பொருட்கள் சிந்தனைக்கு முன்னரே தோன்றிவிட்டன. பொருட்களும் சிந்தனையும் ஒன்றின் மீது ஒன்று தாக்கம் செலுத்தக்கூடியது.

மூளை என்னும் பொருளில் இருந்து தான் சிந்தனை என்னும் செயல்பாட்டைப் பல்வேறு வேதியியல் கூறுகளை உள்ளடக்கி நடத்துகிறது. சூழலில் இருந்து தான் மனிதனின் சிந்தனைகள், மொழி என எல்லாமே மாறுகிறது.

இயக்கவியல்:
ஒரு தத்துவத்தை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் போது அவர் அச்சிந்தனையைச் செயல்படுத்தும் சக்தியாக மாறுகிறார். அந்தச் செயல்கள் மூலமே மாற்றத்தை உருவாக்க முடியும். செயல்கள் மூலமே மாற்றத்தை உருவாக்க முடியும்.

இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று தான் மார்க்ஸ் தம்முடைய சிந்தாந்தத்தை உருவாக்கினார். அவருக்கு முன்னால் இருந்த ஹெகல், ஃபாயர் போன்ற தத்துவ ஞானிகளின் கருத்துகளை உள்வாங்கிச் சீர்படுத்தினார். ஹெகலியவாதி என்றே மார்க்ஸ் அறியப்படுகிறார்.

இயக்கவியலின் விதிகள்:
இந்தியாவிலும் இவற்றைப் பேசியவர்கள் இருந்திருக்கிறார்கள். எதுவுமே தனித்து இயங்காது, எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைந்து தான் இயங்கும். ஒரு விதையை எடுத்துக் கொள்ளுங்கள். அது முளைக்க, பிற உயிரிகளின் உதவி தேவைப்படுகிறது அல்லவா! மாற்றம் என்பது நிலையாக நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு தேங்காயை உடைக்க விசையைச் செலுத்துகிறோம். அந்த விசை செயல்பட்டு, தேங்காய் பயன்பாட்டு நிலைக்கு வருகிறது. இப்படியாகப் பண்பு மாற்றம், அளவு மாற்றம் நடக்கிறது. எதிர்மறைகள் ஒரே செயலில் உடன்பட்டும் முரண்பட்டும் இருக்கின்றன.

வீட்டில் போதுமான வருமானம் இல்லை. என்ன செய்வது? மார்க்சிஸ்டாக இருந்தால், நம்முடைய வருமானம் எதைச் சார்ந்தது? தொழில் எதனுடன் தொடர்புடையது? நம் வருமானத்தைக் குறைக்கும் சக்திகள் என்னென்ன? நம்முடைய பண்பில் எதை நாம் மாற்ற வேண்டும்? எதிர்மறை சக்தியை மாற்றுவது எப்படி எனச் சிந்திப்பார்.

வரலாற்றியல்:
யாருடைய வரலாறு? பூமியா? உயிரிகளா? மனிதர்களின் வரலாறா? தங்கி வாழத் தொடங்கிய மனித இனம், நாடோடியாகத் திரிந்து வந்த மனிதனை அடிமையாக்கி இருக்கலாம். ஏனென்றால், தங்கி வாழும் சமூகத்தில் உபரி உற்பத்தி இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. நாடோடியாகத் திரிந்தவன், காட்டு விலங்குகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம், பஞ்சத்தில் இருந்திருக்கலாம். உபரி தனியாள் உடமையா? சமூகத்தின் உடமையா? எனப் பார்க்கும் போது அடிமைச்சமூகத்தில் இது அடிமைக்குக் கிடையாது.

அடிமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகமாக மாறுகிறது. முதலாளித்துவ சமூகம், உற்பத்திக் கருவிகளைத் தன் வசம் வைத்திருக்கிறது. தொழிலாளி வர்க்கம் அவரைச் சார்ந்து தான் வாழ வேண்டியதாகி விடுகிறது. தொழிலாளிகள் எண்ணிக்கையில் பெருகுவது முதலாளிகளுக்குத் தேவை.

உற்பத்தி முறை தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது. சோசலிசம் என்னும் அமைப்பு, முதலாளிகளை அழித்தொழித்து விட்டு உருவாக்கப்படும் ஒன்று இல்லை. ஆனால், மூலதன உடைமை யாருக்குச் சொந்தமாக இருக்கப் போகிறது? இலாபம் கொழிக்கும் தொழில்கள் சமூகத்திற்கு உடைமையா? முதலாளிகளின் இலாபத்திற்கு உடைமையா? இதற்குத் தான் சோசலிசம் பதில் சொல்கிறது.

சோசலிசத்தில் தொழிலாளி வர்க்கம் தான், ஆட்சிமுறைக்குத் தலைமை ஏற்கும். அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் தொழில்களை அரசு வசம் வைத்துக் கொள்வதும் பிற துறைகளில் தனியாரை அனுமதிப்பதும் சோசலிசத்தில் இருக்கும்.

(வகுப்புக் குறிப்புகள்)

மூலம்: https://podcasts.google.com/feed/aHR0cHM6Ly9hbmNob3IuZm0vcy8xNDA5ZGY0NC9wb2RjYXN0L3Jzcw/episode/YjRhMjY4YWMtY2I5ZC00OTYyLWI4OWQtNzcxYzBhYjRiMmIx?ep=14

Standard

Leave a comment