தமிழ்

திருவள்ளுவர் கூறும் ஒற்றாடல்(59)

ஒற்றாடல்

ஆட்சிக்கு நண்பர்களும் இருப்பார்கள், எதிரிகளும் இருப்பார்கள். எதிரிகளை ஒற்றுப் பார்த்து வருவதற்கு ஒற்றர்களை அமர்த்துதல்.

திரைப்படங்கள்: ராஜி

சங்க இலக்கியத்தில் ஒற்று:

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, ஒற்று வந்தான் என்று கொல்லப் புகுந்தவிடத்துப், பாடி உய்யக் கொண்ட செய்யுள் இது.

புறநானூறு 47:

பாடியவர்: கோவூர் கிழார்.

வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,

நெடிய என்னாது சுரம்பல கடந்து,

வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்,

பெற்றது மகழ்ந்தும், சுற்றம் அருத்தி,

ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி, 5

வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை

பிறர்க்குத் தீதறிந் தன்றோ? இன்றே; திறம்பட

நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,

ஆங்குஇனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்

மண்ணாள் செல்வம் எய்திய 10

நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே.

சிலப்பதிகாரத்தில் ஒற்றர்கள்:

நான் வட இமயம் வரை என்று கண்ணகிக்கு சிலை செய்ய கல் எடுத்து வரப் போவதை கடிதம் வாயிலாக அறிவியுங்கள். அந்தக் கடிதத்தின் மீது வில், புலி, மீன் ஆகிய மூவேந்தர் முத்திரைகளைப் பொறியுங்கள் என்று வீர உரை ஆற்றுகிறான் செங்குட்டுவன்.

அப்போது செங்குட்டுவனின் அமைச்சன் வில்லவன் கோதை தம்முடைய கருத்தைச் சொல்கிறான். அப்போது

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கியஎன்று புகழ்ந்து பேசுகிறான். அப்போது அழும்பில்வேள் என்னும் மற்றோர் அமைச்சன்,

நாவலம் தண்பொழில் நண்ணார் ஒற்று நம்

காவல் வஞ்சிக் கடை முகம் பிரியா;

வம்பணி யானை வேந்தர் ஒற்றே

தஞ்செவிப் படுக்கும் தகைமைய அன்றோ?

அறைபறை என்றே அழும்பில்வேள் உரைப்ப

(காட்சிக் காதை சிலப்பதிகாரம்)

இந்த நாவலந்தீவின் குளிர்ந்த சோலைகளில் உள்ள நம் பகை அரசர்களின் ஒற்றர்கள், காவலில் சிறந்த நம் வஞ்சி நகரத்தின் கடைசி வாயிலை பிரியாமல் காத்திருக்கிறார்கள்.

அர்த்த சாஸ்திரத்தில் ஒற்றர்கள்:

A man with shaved head or braided hair and desirous to earn livelihood is a spy under the guise of an ascetic practicing austerities. Such a spy surrounded by a host of disciples with shaved head or braided hair may take his abode in the suburbs of a city, and pretend as a person barely living on a handful of vegetables or meadow grass taken once in the interval of a month or two, but he may take in secret his favorite foodstuffs.

அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி, அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம். (அர்த்த சாஸ்திரம்)

பிராமணப் பெண்களை ஒற்றர்களாகப் பயன்படுத்தலாம் என்கிறது அர்த்த சாஸ்திரம்.

A female wanderer who is looking for a livelihood, who is poor, a widow, bold, and a Brāhmaṇa woman, and who is treated respectfully in the royal residence, should visit the homes of high officials. Her case explains that of shaven-headed ascetics who are Śūdra women.These are the mobile agents.

இந்திய உளவுத் துறை:

RAW – 1968ஆம் ஆண்டு – 1971 – கங்கா வானூர்தி இலாகூர் குரேஷி கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ்

Operation Black Tiger – இரவீந்தர் கெளஷிக் பாகிஸ்தான் இராணுவத்தின் மேஜர் ஜெனரல்

இந்திய அமைதிப் படை

அமைதிப்படை எங்கள் மீது போர் தொடுப்பது என்பதைக் கண்ட எங்களது மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள். எங்கள் மீது தொடுக்கப்பட்ட போரானது இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு முரணானதும், ஓர் அத்துமீறலுமாகும்.” – விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன்.

Black Friday – மும்பை தீவிரவாதத் தாக்குதல்

திருவள்ளுவர் பார்வை என்ன?

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். (581)

ஒற்றர்களும் ஒற்றுப் பற்றிய புகழ் அமைந்த அரசியல் நூலும் ஆகிய இரண்டையும் அரசன் தன் இருகண்கள் எனத் தெளிவாக உணர வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில். (582)

அரசன் தம்மால் ஆளப்படும் அனைவரிடத்திலும் நிகழ்பவை எல்லாவற்றையும் எப்போதும் ஒற்றரைக் கொண்டு விரைந்து அறிதல் அரசன் கடமையாகும்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்

கொற்றங் கொளக்கிடந்தது இல். (583)

ஒற்றரைக் கொண்டு அரசன் கீழ்ப் பணியாற்றும் அனைவரைப் பற்றிய செய்திகளையும் மறைவாக அறிந்து வரச் செய்வதுடன் அந்த ஒற்றர்களை அவர்கள் சரியாகச் செயல்படுகின்றார்களா என்பதை அறிய வேறு ஒற்றர்களை அமைத்து அறிந்து வரச் செய்து அவற்றால் விளையும் பயன்களை ஆராய்ந்து செயல்படும் அரசன் வெற்றியடையக் கூடிய வழி வேறு இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு

அனைவரையும் ஆராய்வது ஒற்று. (584)

அரசுப் பணியாளர், அரசனின் உற்றார், அரசனின் பகைவர் என்று சொல்லப்படும் அனைவரையும் மறைவாக ஆராய்பவனே சரியான ஒற்றன் ஆவான்.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்

உகாஅமை வல்லதே ஒற்று. (585)

பிறர் ஐயுற முடியாத தோற்றத்தோடு பழகி, ஒருக்கால் பிறர் ஐயுற்று நோக்கி ஆராயத் தொடங்கினாலும் அவர் சினந்து நோக்கும் நோக்கிற்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் எந்த வகையிலும் தன் மனத்தில் உள்ளதை வெளியிடாமல் இருக்க வல்லவனே சிறந்த ஒற்றன் ஆவான்.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று.(586)

முற்றும் துறந்த முனிவரின் கோலம் பூண்டு புகுவதற்கரிய இடங்களில் எல்லாம் புகுந்து ஆராய வேண்டியவைகளை எல்லாம் ஆராய்ந்து அறிந்து அங்குள்ளவர்கள் ஐயுற்றுப் பிடித்துச் சித்திரவதை செய்தாலும் வாய் சோர்ந்து தம்மை வெளிப்படுத்தாதவரே சிறந்த ஒற்றர் ஆவார்.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை

ஐயப்பாடு இல்லதே ஒற்று. (587)

மறைவாகச் செய்கின்ற செயல்களையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவரிடம் கேட்டறிய வல்லவராகி, தாம் கேட்டறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியும் ஆற்றல் உடையவரே சிறந்த ஒற்றர் ஆவார்.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்

ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588)

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிந்து வந்து அறிவித்த செய்திகளையும் மற்றோர் ஒற்றனைக் கொண்டு அறிந்து வரச் செய்த செய்திகளையும் ஒப்புநோக்கி அரசன் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்

சொற்றொக்க தேறப் படும். (589)

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதவாறு தனித்தனியே அவர்களை ஆள வேண்டும். அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் குறைந்தளவு மூவர் கூறுவதும் ஒத்திருந்தால் அதையே உண்மையென்று தெளிதல் வேண்டும்.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்

புறப்படுத்தான் ஆகும் மறை. (590)

அரசன் ஓர் ஒற்றனுக்குச் செய்யும் சிறப்பைப் பிற ஒற்றன் ஐயுறுமாறு செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் மறைவான செய்திகளை அரசன் தானே அனைவருக்கும் வெளிப்படுத்தியவன் ஆவான்.

நன்றிக்குரியோர்:

https://www.vinavu.com/2019/10/25/book-intro-kovilgal-ingu-kollaiyadikkapadum/

https://tamilandvedas.com/tag/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/

https://moodle2.cs.huji.ac.il/nu15/pluginfile.php/195381/mod_resource/content/1/Arthasastra_SecondPass-1.pdf (பக்கம் 102)

http://www.tamilcanadian.com/article/tamil/631

Standard

Leave a comment